இரத்த புற்றுநோய் வர என்ன காரணம்? இதோ அதன் முக்கிய அறிகுறிகள்!

இரத்தப்புற்றுநோய் இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய்.

இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் குறிப்பாக அறியப்படுகிறது.

இரத்த புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
  • நோய்களை கண்டறிவதற்காக எடுக்கப்படும் X-ray பரிசோதனைகள் உடலின் எலும்புவரை ஊடுருவி செல்லும் தன்மை வாய்ந்ததால் அவை அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்த புற்று நோய் வர காரணமாக உள்ளது.
  • அஸ்பெஸ்டோஸ் என்றழைக்கப்படும் கட்டட சுவர்களில் உள்ள இரசாயனங்கள் அன்றாட வாழ்வில் நம்மோடு கலப்பதனால் இரத்தப்புற்று நோய் ஏற்பட காரணமாக அமையும்.
  • புகைப்பிடிப்பு, மதுபானங்கள், எரிபொருட்களிலும் கரைப்பான்களிலும் உள்ள பென்சீன் பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயனங்கள், உடல் சுரப்பி மாற்றங்கள், அளவுக்கதிகமாக மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் போன்றவற்றினாலும் ஏற்படுகின்றன.
இரத்த புற்றுநோயின் அறிகுறிகள்
  • இரத்தப்புற்று நோய் நோயாளிகளுக்கு எளிதில் காயம் ஏற்பட்டு ரத்தப்பெருக்கு மிக அதிக அளவில் உண்டாகலாம் அல்லது ஊசி முனை ரத்தப் பெருக்குகள் பெடெசியா உருவாகலாம்.
  • இரத்தப்புற்று நோய் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை செயலற்றதாகச் செய்து விடுவதால் சில நோயாளிகள் தொண்டை அழற்சி வாய்ப் புண்கள் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்.
  • சிவப்பு ரத்த அணுக்களின் குறைபாடு அனிமியா எனப்படும் ரத்தச் சோகையில் விளைந்து டிஸ்பனியா மற்றும் பல்லோர் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • காய்ச்சல், குளிர், இரவில் வியர்த்தல் மற்றும் குளிர்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அல்லது களைப்பாக உணர்தல் போன்ற சுகவீனங்களை உணர்வதை உள்ளடக்கியுள்ளன.
  • குமட்டல், ஈரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கத்தினால் வயிற்றில் பாரமாக உணர்தல் போன்றவற்றை அனுபவிக்கிறார்கள். இது நாம் அறியாமலேயே நமது எடை குறைவதில் விளையலாம்.
  • ரத்தப் புற்று நோய் அணுக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி விட்டால், பிறகு நரம்பியல் தொடர்பான (மிகவும் குறிப்பாக தலைவலி போன்ற) அறிகுறிகள் ஏற்படலாம்.

Related posts