அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதித்தது பேஸ்புக்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு  முன்பிருந்தே அரசியல் விளம்பரங்கள் எதையும் வெளியிடுவதில்லையென, பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் கொரோனாத் தொற்று மற்றும் வாக்குப் பதிவுகள் தொடர்பானத்  தவறான பதிவுகளும் நீக்கப்படவுள்ளதாக  அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் வாக்குகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்த தவறான தகவல்களை தடுக்க  வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பதிவுகளுக்கு மட்டும் இணைப்பினை வழங்கவும்  பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts