229 இலங்கையர்கள் நாடு திரும்பினர் !

வெளிநாடுகளில் இருந்து மேலும் 229 பேர் நாட்டிற்கு வந்தடைந்தனர்.

நேபாளம் மற்றும் இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர்களே இவ்வாறு நேற்று இரவு நாட்டிற்கு திரும்பினர்.

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து அந்நாடுகளில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டின் காரணமாகவே குறித்த இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே சிறப்பு விமானங்கள் இரு நாட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதேவேளை நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து 26 பேரும் , இஸ்ரேலில் பணிபுரிந் 203 இலங்கையர்களும் ஜோர்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

நாட்டை வந்தடைந்த அவர்களை கொரோனா வைரஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts