எண்ணெய் கப்பலில் ஒருவர் பலி; தீயணைப்பு பணி தொடர்கிறது!

அம்பாறை – சங்கமன் கந்த கடற்பகுதியில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் நேற்று (03) காலை தீ விபத்துக்கு உள்ளாகி தீயில் எரிந்துவரும் எண்ணெய் கப்பலின் ஊழியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்

இதனை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கப்பலில் இருந்த 24 பேரில் முன்னதாக 19 பேரின் காயத்துடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை, விமானப்படை, துறைமுக அதிகார சபை, இந்திய கடற்படை, விமானப்படை, கரையோர பாதுகாப்பு படை ஆகியன இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts