பிறந்த நாள் பலன்கள்!

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு நாளில் பிறந்தவர்களுக்கு என சில பிரத்தியே குணங்கள் இருக்கும் அவை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

 

1,10,19,28- A,I,J,Q,Y

• விரைவில் வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
• வளர்ச்சிக்கான வாய்ப்பு வீடு தேடி வரும்.
• பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
• பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
• சுப விஷயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.
• அந்தஸ்து மிக்கவர் அறிமுகத்தால் நன்மை காண்பீ்ரகள்.

2,11,20,29- B,K,R

• சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்வீர்கள்.
• வீடு, மனை வாங்குவது பற்றிய பேச்சு முடிவுக்கு வரும்.
• பிள்ளைகள் வழியில் சுபவிஷயம் நடத்த விரும்புவீர்கள்.
• மனைவிவழி உறவினர்கள் நெருக்கமுடன் இருப்பர்.
• குடும்பத்தில் அடிக்கடி மருத்துவச் செலவு ஏற்படும்.
• பெண்கள் கணவரின் அன்பு மழையில் நனைவர்.

3,12,21,30 -C,G,L,S

• எதிர்பாராத வருமானத்தால் கையிருப்பு அதிகரிக்கும்.
• கொடுத்த வாக்கை நிறைவேற்றி நற்பெயர் காண்பீர்கள்.
• அலுவலகத்தில் திடீர் பொறுப்பு கூடும்.
• தெய்வ நம்பிக்கையுடன் விரதம் மேற்கொள்வீர்கள்.
• தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்.
• அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை நடந்தேறும்.

4,13,22,31- D,M,T

• தந்தைவழி உறவினரால் நன்மை ஏற்படும்.
• சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சமரச முடிவு உண்டாகும்.
• மிகவும் மதிக்கும் மனிதரை சந்திக்கும் வாய்ப்புண்டு.
• நம்பிக்கைக்கு உரிய நபரால் ஏமாற்றம் ஏற்படலாம்.
• எதிர்பாராத நபர் மூலம் பணஉதவி கிடைக்கும்.
• திட்டமிட்ட வெளியூர் பயணம் தள்ளிப்போகும்.

5,14,23- E,H,N,X

* வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கும்.
• குடும்பத் தேவை நிறைவேறும். புதிய வழியில் வருமானம் வரும்.
• உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
• உறவினர் ஆதரவால் சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
• பால்ய நண்பர்களை சந்தித்து பேச வாய்ப்புண்டு.
• அறிமுகம் இல்லாதவரிடம் பேசிப் பழக வேண்டாம்.

6,15,24- U,V,W

• எதிர்பார்த்த உயர்பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
• அரசு வகையில் ஆதாயத்தை எதிர்பார்க்கலாம்.
• பிள்ளைகளின் செயல்பாடு எதிர்கால மகிழ்ச்சிக்கு வித்திடும்.
• செல்வாக்கு மிக்கவர்கள் உங்களிடம் தவி கேட்டு வரலாம்.
• திட்ட விஷயங்கள் சரியான முறையில் நிறைவேறும்.
• உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

7,16,25 – O,Z

• பிள்ளைகளின் வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்.
• உடல்நிலை பற்றிய பயம் வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.
• எதிர்பாராத சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.
• தொழிலில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கலாம்.
• வீண் வம்பு, வழக்கிலோ மாட்டாமல் விழிப்புடன் இருங்கள்.
• சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

8,17,26- F,P

• புதிய பணிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
• விரும்பிய துறையில் சாதனை படைக்க முயல்வீர்கள்.
• குழந்தைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
• பணியாளர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்கும்.
• சிக்கனத்தால் நிர்பந்த கடன்கள் ஓரளவு அடைபடும்.
• நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.

9,18,27

• மற்றவர் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம்.
• உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள்.
• பெற்றோர் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும்,
• பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.
• எந்த சூழலிலும் தன்னம்பிக்கை குறையாமல் இருங்கள்.
• தொழிலில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும்.

Related posts