ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

திஸ்ஸமஹாராம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 696 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, 05 தேங்காய்களில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு சந்தேகநபர்கள் மொரகஹாஹேன பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரும் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts