மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் பலி!

மட்டு.மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட மாவடியோடைப் பகுதியில் இடம்பெற்ற திடீர் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன.

இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த 27 பசு பசுக்கள் இறந்துள்ளதாகவும் ஒரே இரவில் சுமார் 20 இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள எமக்கு அரசாங்கம் ஒரு ஊக்குவிப்பையாவது வழங்குமானால் எம்மால் இந்த தொழிலை தொடர்ந்து செய்யக்கூடியதாக இருக்குமென பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் கவலையுடன் தெரிவித்தார்.

Related posts