மன்னாரில் கடும் மழை, காற்று!

மன்னார் மாவட்டத்தில்  கடும் மழையுடன் கூடிய காற்று வீசியதன் காரணமாக 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகளில் உள்ள 112 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் இந்த அனர்த்தத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts