நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

தற்பொழுது நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் மண் சரிவு, மண்மேடு உடைந்து விழுதல், பாறைகள் புரலுதல், நிலம் தழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts