ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா!

இந்தியா – உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாநிலத்தின் பண்டா நகரில் உள்ள புட்டா குடான் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts