அசாதாரண காலநிலையினால் யாழ் மாவட்டத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை!

நாட்டின் அசாதாரண காலநிலையினால் யாழ் மாவட்டத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“தற்போது வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் கணிசமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை எந்தவித அனர்த்தங்களோ சேதங்களோ இடம்பெற்றதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு அறிக்கை கிடைக்கவில்லை.” – என்றார்.

Related posts