வௌிநாடுகளிலிருந்து வந்த 37 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,049 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (31) 37 கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையினர் 3 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த இருவர் மற்றும் கத்தாரிலிருந்து வருகை தந்த 9 பேருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய 2,868 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts