நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்!

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொது மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக  நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில்  வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் எதிர் வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்  என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாவனையாளர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  வினயமாக கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts