இளம் பெண்ணின் வாய்க்குள் புகுந்த உயிரினம்….!

ரஷ்யா நாட்டில் உள்ள லவாசி என்ற கிராமத்தில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள் எதோ செல்வது போன்ற உணர்வு ஏற்பட உடனே தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தார்.

எனினும் குறித்த உயிரினம் அவரது வயிற்றுக்குள் சென்று விட்டது. பின்னர் அவருக்கு வலி எடுக்கவே உடனே வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவரிடன் கூறியுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் வாய் வழி ஊடாக எண்டோஸ்கோப் கருவியைப் பொருத்தி அந்த உயிரினத்தை வெளியே எடுத்துள்ளனர்.

அந்த உயிரினம் 4 அடியில் இருந்த பாம்பு என்பதை அறிந்த மருத்துவ ஊழியர்கள் நடுங்கி கத்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts