இன்று 640 இலங்கையர்கள் இலங்கை வருகை!

கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது சிக்கியிருந்த 640 பேர் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 640 இலங்கையர்களே இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு கட்டார் டோஹாவில் இருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் டுபாயிலிருந்து 288 பேரும் இவ்வாறு மொத்தமாக 640 பேர் இன்றையதினம் அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, சீன முதலீட்டுத் திட்டங்களில் பணிபுரியும் 168 சீனப் பிரஜைகள் நேற்று இரவு சீனாவின் செங்குடு விமான நிலையத்தில் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

Related posts