வாகனங்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலையேற்றத்திற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின் இறக்குமதியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்கள் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது அதிகளவு பணத்தை செலவிடுவது அநாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் போதியளவு வாகனங்களின் இறக்குமதி இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts