வவுனியாவில் மினி சூறாவளி!

வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று மதியம் பெய்த கடும்காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன் பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன.

அந்தவகையில் கணேசபுரத்தில் வீசிய கடும்காற்றினால் 34வீடுகளும், சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த  வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டமையால் வீடுகளிற்குள் தண்ணீர் சென்றுள்ள நிலையில் மக்கள் இருப்பதற்கு வசிப்பிடமின்றி அசௌகரியங்களிற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை பலமான காற்று வீசியதால் வாழை,தென்னை போன்ற பயன்தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளது.

Related posts