மெக்டொனால்டின் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களினால் கவிழ்ப்பு!

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல பழங்குடியின மக்களைக் கொன்ற கொடூரமான கொள்கைகளுடன் தொடர்புடைய கனடாவின் முதல் பிரதமர் ஜோன் மெக்டொனால்டின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கவிழ்த்துள்ளனர்.

கறுப்பு இனத்தவர்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கிடையே கனடாவின் மாண்ட்ரீல் அமைந்துள்ள ஜோன் மெக்டொனால்டின் சிலையானது சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலையை கட்டி இழுக்கும்போது, சிலையின் கவிழ்ந்து வீழ்ந்து, அதன் தலைப் பாகம் நடைபாதையில் உருண்டோடியுள்ளது.

மெக்டொனால்ட் கனடாவின் பிரதமராக 1860 மற்றும் 1890 க்கு இடையில் 19 ஆண்டுகள் இருந்தார்.

மேலும் அவரது தேசத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்காக நினைவுகூரப்படுகிறார். அவர் குடியிருப்புப் பள்ளி முறையையும் உருவாக்கினார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த அமைப்பு குறைந்தது 150,000 பழங்குடி குழந்தைகளை தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றி அரசு நிதியுதவி உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்பியது.

அங்கு பல குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் மற்றும் சிலர் இறந்தனர். மேலும் அவர்கள் தங்கள் சொந்த மொழியைப் பேசுவதையோ அல்லது அவர்களின் கலாசாரத்தை கடைப்பிடிப்பதையோ தடைசெய்தனர்.

2015 ஆம் ஆண்டில் ஒரு அரசாங்க அறிக்கை இந்த நடைமுறையை “கலாசார இனப்படுகொலை” என்று அழைத்தது.

அதன் பின்னர்  பல பழங்குடியின மக்களைக் உயிரிழக்க செய்த பஞ்சம் மற்றும் நோயை அனுமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் அவரது அரசாங்கம் சில முதல் தேச சமூகங்களை தங்கள் பாரம்பரிய பிரதேசங்களை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது, அவ்வாறு செய்யும் வரை உணவை நிறுத்தி வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந் நிலையில் மெக்டொனால்டின் சிலை கவிழ்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கியூபெக் பிரதமர் பிரான்சுவா லெகால்ட், ஜோன் மெக்டொனால்டு பற்றி ஒருவர் என்ன நினைத்தாலும், இந்த வழியில் ஒரு நினைவுச்சின்னத்தை அழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாம் இனவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும், ஆனால் நம் வரலாற்றின் சில பகுதிகளை அழிப்பது தீர்வு அல்ல எனக் கூறியுள்ளார்.

Related posts