முள்ளிவாய்க்காலில் ஐஸ் மழை !

முள்ளிவாய்க்கால் மேற்கு மற்று கிழக்கு பகுதிகளில் நேற்றுமாலை மழையுடன் கூடிய புயல் காற்று வீசியுள்ளதுடன் ஐஸ் கட்டிகளும் கொட்டியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால்  15 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் முள்ளிவாய்க்கால் மேற்கில் தற்காலிக வீடு ஒன்று முற்றுமுழுதாக காற்றினால் சேதமடைந்துள்ளது.

ஏனைய வீடுகளின் கூரை ஓடுகள் காற்றினால் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

ஐஸ் மழைபெய்ததால் மக்களின் வீடுகளின் கூரைகள் பல சேதமடைந்துள்ளன.

சில வீடுகளில் நின்ற வேப்பமரக்கிளைகள் முறிந்துள்ளதுடன் சுழற்றி வீசிய காற்றினால் வேலிகள் பல சாய்ந்துள்ளன.

மக்களின் சேத விபரங்கள் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Related posts