அபுதாபியில் வெடிப்பு சம்பவம் : 2 பேர் உயிரிழப்பு!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் இன்று(31) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபி, ஏர்போட் வீதியில் உள்ள  KFC உணவகத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பு தரப்பு இதுபற்றி தெரிவிக்கையில் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts