காற்றை சுத்திகரிக்கும் PuriCare முகக்கவசம்: எல்ஜி நிறுவனம் அறிவிப்பு!

காற்றை சுத்திகரிக்கும் வகையிலான PuriCare முகக்கவசத்தை எல்ஜி நிறுவனம் வடிவமைத்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் மக்களை கவரும் வகையில் விதவிதமான முகக்கவசங்கள் விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் எல்ஜி நிறுவனம் PuriCare என்ற முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் காற்றை சுத்திகரிக்கும் பண்பு இதற்கு உண்டு. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ள சமயத்தில் இதுபோன்ற முகக்கவசங்களுக்கு வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது.

இதன்மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்க முடியும். இதில் இரட்டை மின்விசிறிகள் காணப்படுகின்றன. மேலும் சுவாச சென்சாரும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் முக வடிவத்திற்கு பொருந்தும் வகையில் இதனை அணியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் IFA 2020 நிகழ்ச்சியில் இதனை காண்பிக்கவிருக்கின்றனர். இது பயன்பாட்டுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது. இதன் விலை குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும்.

LG

இந்த முகக்கவசம் H13 HEPA filters உதவியுடன் காற்றை சுத்திகரிக்கிறது. இவை தானாகவே வேகமடைந்து காற்றை சுவாசிக்க உதவுகின்றன. அதில் உள்ள சென்சார் காற்றின் அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ப அதில் உள்ள மின்விசிறியின் செயல்பாடுகளை சரிசெய்யும். இதில் 820mAh பேட்டரி வசதி காணப்படுகிறது. இதில் low mode மற்றும் high mode வசதியும் காணப்படுகிறது. நீங்கள் தேர்வு செய்யும் ஆப்ஷனுக்கு ஏற்ப இதனை 8 மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வரை உபயோகிக்கலாம். அதன்பிறகு நீங்கள் இதனை சார்ஜ் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். LG ThinQ செயலி மூலம் தேவையான தகவல்களையும் பெற முடியும்.

நுகர்வோர் வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவது முக்கியம் என எல்ஜி எலெக்ட்ரானிக் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவன தலைவர் டான் சாங் தெரிவித்துள்ளார்.

Related posts