கனடாவில் தொழில் : இணையத்தளத்தினூடாக பண மோசடி!

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, இணையத்தளத்தினூடாக 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை பணமோசடி செய்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சபைர் குற்றப் பிரிவுக்கு கிடைத்த மூன்று முறைப்பாட்டுக்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சைபர் குற்றப் பிரிவினர் இவ்வாறான தொடர்ச்சியான முறைப்பாடுகள் பலவற்றை பதிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாடுகள் கந்தானை, நிட்டம்புவ, அனுராதபுரம், காலி, கொழும்பு, கிரியுல்ல மற்றும் ராகம பகுதிகளில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts