கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல!

தற்போது கிடைத்த செய்தி

கண்டியில் நேற்றிரவு ஏற்பட்ட அதிர்வு இயற்கையான நில நடுக்கம் அல்ல. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர்

இந் நிலையில் இது தொடர்பில் புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுரா வால்போலா தெரிவிக்கையில்,

நாட்டில் நில அதிர்வுகளை பதிவுசெய்வதற்கான பணியகம் மஹிந்தலை, பல்லேகல, ஹக்மன, புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய ஐந்து பகுதிளில் உள்ளது.

நேற்று ஏற்பட்ட நடுக்கம் உண்மையான நில அதிர்வாக இருந்தால் இந்த ஐந்து மையங்களும் அதை பதிவுசெய்திருக்கும். எனினும் அவ்வாறு பதிவுசெய்யப்படவில்லை.

இதேவேளை நடுக்கத்தின் அளவு 2.0 ஐ விட அதிகமாக இருந்தால் மட்டுமே அது நிலநடுக்கமாக  கருதப்படும்.

எனினும் இது குறித்து ஆய்வு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி விசேட குழுவொன்று இன்று அதிர்வு பதிவுசெய்யப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது என்றார்.

Related posts