இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,995 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றையதினம் இலங்கையில் மேலும் 6 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 4 பேரும் லெபனானிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஒருவருக்கும் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 134 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, இலங்கையில் கொரோனா  தொற்றிலிருந்து இதுவரை 2,849 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts