ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகளை பெற்ற தாய்!

கொழும்பில் ஒரே பிரவசத்தில் தாய் ஒருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகளும் பிறந்துள்ளன.

இந்த ஐவரும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரிக்கா கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.

பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கே ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts