இறந்தவர்களின் உடல்களை தோண்டியெடுத்து விசித்திர சடங்கு!

இந்தோனேஷியாவில் உயிரிழந்த உறவினர்களின் சடலங்களை தோண்டியெடுத்து கௌரவிக்கும் சடங்கு கொண்டாடப்பட்டு முடிந்துள்ளது.

இந்தோனேஷியாவின் டோர்ஜா சமூகத்தினர் வாழும் பங்களா, வடக்கு டோராஜா, தெற்கு சுலவேசியில் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்திலும் இந்த சடங்கு இடம்பெறுவது வழக்கம்.

உயிரிழந்தவர்களின் சடலங்களிற்கு உடை அணிவித்து, சிகரெட் பற்ற வைத்து, குடும்ப உறவினர்கள் கட்டியணைக்கிறார்கள். உடலையும்,சவப்பெட்டியையும் சுத்தம் செய்து, அலங்கரித்து மீண்டும் புதைப்பார்கள்.

பன்நெடுங்காலமாக வருடாவருடம் ஆகஸ்டில் இந்த கொண்டாட்டம் இடம்பெறும். டோர்ஜா சமூகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டம் இதுவாகும். தமது அன்புக்குரியவரின் சடலத்தை தோண்டியெடுத்து, கௌரவம் செய்கிறார்கள்.

அன்புக்குரியவர்கள் இறக்கும் போது அவர்களின் உடல்களை மாதங்கள், சில நேரங்களில் ஆண்டுகளாக தங்கள் சொந்த வீடுகளில் அவர்கள் பேணி பாதுகாக்கிறார்கள். அல்லது சடலங்களை புதைக்காமல் பாதுகாத்து வைப்பதற்காகவே அமைக்கப்பட்ட ‘டோங்கொனன்’ என்ற இடத்தில் பாதுகாத்து வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் அங்குள்ள உடல்களை எடுத்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இறந்த சடலங்களுடன் பேசுவது, உணவு படைப்பதன் மூலம் அவர்கள் உயிருடன் இருப்பதை போல நினைக்கிறார்கள்.

அவர்களின் அன்புக்குரியவர்களுக்கான வருடாந்த சடங்கை, அவர்களின் இரண்டாவது இரண்டாவது இறுதி சடங்காக கருதுகிறார்கள். உடல்கள் சிதைவடைவதைத் தடுக்க சவப்பெட்டிகளை சுத்தம் செய்கின்றனர் அல்லது மாற்றுகின்றனர்.

உறவினர்கள் இறந்தவர்களுடன் நேரத்தை செலவழித்தபின், அவர்களின் உடல்கள் மற்றும் சவப்பெட்டிகளை மீண்டும் அலங்கரித்த பிறகு, மீண்டும் புதைத்து விடுவார்கள்.

Related posts