இன்று 231 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் சவுதி அரேபிய ஆகிய நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்ற 231 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் மொத்தம் 42 இலங்கையர்கள் அதிகாலை 1.26 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் -688 என்ற விமானத்தில் 22 இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதுதவிர சவுதி அரேபியாவின் டம்மாமிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -264 என்ற விமானத்தில் 167 இலங்கையர்கள் அதிகாலை 5.40 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts