3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருகொடவத்தையில் ஒருவர் கைது!

3 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய 3 கிலோகிராம் ஹெரோயினுடன் காரில் பயணித்த ஒருவர் ஒருகொடவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 6 ,11,000-இற்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts