வெளிநாடுகளிலிருந்து 426 பேர் வருகை!

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 426 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 04 விமானங்களின் மூலம் குறித்த இலங்கையர்கள் இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 23 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து 17 பேரும், ஜேர்மனியிலிருந்து 102 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரின் டோஹாவிலிருந்து 279 பேர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த விமான பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts