யாழில் இப்படியும் நடக்கிறது – பொலிஸாரால் பொய் முறைப்பாடு!!

தெல்லிப்பழை பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் 24 வயதான இளைஞன் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மதுபானத்தை பொலிசார் பருக்கி விட்டு, மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞனின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய கிளையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இரவு 9 மணியளவில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை. பொலிசாரை கண்டதும் இளைஞர்கள் தப்பியோட முனைந்துள்ளனர். அவர்களை கலைத்து பிடித்த பொலிசார், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகில் வைத்து தாக்கதல் நடத்தியதுடன், பொலிஸ் நிலையத்திற்கும் கொண்டு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு சாராயத்தை பருக்கிவிட்டு, மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக பொய்யான வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என முறையிட்டுளள்னர்.

காயமடைந்த இளைஞனை உடனேயே தெல்லிப்பழை பொலிசார் விடுவித்துள்ளனர். அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related posts