அமெரிக்காவில் லாரா புயல்!

அமெரிக்க மாநிலங்களான டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் ஏற்பட்ட லாரா புயலினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

கியூபாவிலிருந்து மெக்ஸிக்கோ வளைகுடா வழியாக இந்த புயலானது நகரும் என எதிர்பார்க்கப்படுதாக அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடைய கடந்த திங்கட்கிழமை லூசியானாவை தாக்கிய புயலினால் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் சுமார் 3 85,000 இற்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு வீடுகளிலிருந்து வௌியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

Related posts