பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று!

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர சபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தினர்.

Related posts