செம்மீன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு!

செம்மீன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி மாலை 4.15 மணியளவில் செம்மீன் விளையாட்டுக் கழக மைதான முன்றலில் நடைபெறும்.

இந்நிகழ்வை சிறப்பிக்க திரு . க.கவீந்திரன் (தலைவர், செம்மீன் விளையாட்டுக்கழகம்) தலைமைதாங்குகிறார். மேலும் பிரதம விருந்தினராக திரு. த. பிரசாத் (செயலாளர், நகரசபை வல்வெட்டித்துறை) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு . சி. தவனேஸ்வரன் (கிராமஅலுவலர் – பொலிகண்டிமேற்கு, வல்வெட்டித்துறை), திருமதி. முகுந்தலா முகுந்தன் (நிர்வாக உத்தியோகத்தர் – வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம், பருத்தித்துறை)  மற்றும் கௌரவ விருந்தினர்களாக சிவப்பிரம்ம ஸ்ரீ தண்டபாணிக தேசியக் குருக்கள் (பிரதமகுரு வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), அருட்தந்தை யோ. பிரான்ஸிஸ் அடிகளார் (பங்குத்தந்தை சற்கோட்டை) திரு க. கர்ணரூபன் (யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

 

Related posts