உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் கடந்த 5 மாதங்களில் உலக சுற்றுலாத் துறை ஏற்றுமதியில் 32,000 கோடி அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 5 மாதங்களாக உலகின் பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளில் கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால், அந்தந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முடங்கிப்போனது.
தொழில்கள், வர்த்தகம், சிறு வியாபாரம், சிறு, குறுந்தொழில்கள் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளன. இதில் அதிக வருமானத்தைத் தரக்கூடிய சுற்றுலாத் துறையும் ஊரடங்கால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வருமானத்தையே பெரும்பகுதி நம்பியிருக்கும் நாடுகளில் கொரோனாவால் மிக மோசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுவரை உலக அளவில் கொரோனாவில் 2.37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.17 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டரெஸ் கொள்கை விளக்கக் கூட்டத்தில் நேற்று பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
”உலகப் பொருளதாாரத்தில் ஏற்றுமதித் துறையில் எரிபொருள், இரசாயனம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் வருமானத்தைத் தரக்கூடிய சுற்றுலாத்துறைதான். கடந்த 2019ஆம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் 7 சதவீதம் சுற்றுலாத் துறைதான்.