கொரோனாவினால் தடைப்பட்டிருந்த யாழ். அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது!

‘கொரோனாவினால் தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களில் 2 பிரதான திட்டங்கள் அரசினாலும் மேலும் ஒரு திட்டம் உலக வங்கியின் நிதியீட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனைவிட பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன

இதில் “சப்ரிகம” செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 690 மக்களால் இனங்காணப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இவ் வருடம் 2020ல் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த 690 திட்டங்களுக்குமான மொத்த மதிப்பீடு 870 மில்லியன் ரூபா. இந்த திட்டத்தினை கொரோனா காலப்பகுதிக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும் அதன் பிற்பாடு அந்த வேலைகள் முற்றாக முடிவுறுத்தப்படவில்லை. எனினும் 573 வேலைகள் முடிவுற்றுள்ளன. இதற்கென 245 மில்லியன் ரூபா தற்போது வரை செலவிடப்பட்டுள்ளது.

Related posts