இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி!

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியே நீடிக்கவுள்ளார்.

7 மணித்தியாலங்களாக இடம்பெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்ததை தொடர்ந்து, சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர வெளிப்படையான தலைமைத்துவம் அவசியமென வலியுறுத்தி, 20 இற்கும் அதிகமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ​கடிதம் அனுப்பியதை அடுத்தே, அவர் இந்த பதவி விலகல் அறிவிப்பை வௌியிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் நிறைவில் தாம் தலைமை பதவியில் நீடிப்பதாக தெரிவித்திருந்ததுடன், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts