மோதலில் மாணவர் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம் பெற்ற குழுக்களுக்குள் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளமை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

நேற்று முன் தினம் இரவு இடம் பெற்ற இந்த மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவனே வாள் வெட்டுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழுக்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்து பின்னர் குழு மோதலாக மாறியுள்ள நிலையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts