அமெரிக்காவில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட காணொளிகளை நீக்கியது டிக்டொக்!

அமெரிக்காவில் வெறுப்பை தூண்டும் பேச்சுக்கொள்கையை மீறியதாக இந்தாண்டு 3 இலட்சத்திற்கு அதிகமான காணொளிகளை டிக்டொக் செயலி நீக்கியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டொக் என்ற செயலியை நடத்துகிறது.

இது, மொபைல் போனில், ‘காணொளி’ பதிவுகளை பகிர்ந்து கொள்ள உதவுவதால், கோடிக்கணக்கானோர், டிக்டொக் செயலியை பதிவிறக்கி பயன்படுத்தி வந்தனர்.

இந்த செயலி மூலம் சீன அரசு, இந்த தகவல்களை உளவு பார்க்கவும், பிற நாடுகளில் பொய் பிரசாரம் செய்ய பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

‘அமெரிக்காவில் செயல்படும், டிக்டொக் நிறுவனம், பைட் டான்சுடன் எந்தவொரு தகவலையும் பகிரக் கூடாது’ என, ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வெறுப்பை தூண்டும் பேச்சு கொள்கையை மீறியதாக இந்தாண்டு மட்டும் 1,300 க்கும் மேற்பட்ட கணக்குகளையும், 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணொளி பதிவுகளையும் நீக்கியதாக பைட் டான்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Related posts