செப்டெம்பர் 02 முதல் பாடசாலை 7.30 – 1.30 மணி வரை!

கொரோனா (கொவிட்-19)  வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளுக்கான நேரம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்புகின்றது.

தரம் 10, 11, 12, 13 வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் காலை 7.30 மணி முதல் மாலை 1.30 மணிவரை என வழமையான நேரத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு சகல மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள், சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய சகல பாடசாலைகளினதும் 10, 11.,12 மற்றும் 13 வகுப்புகளுக்கு ஓகஸ்ட் மாதம் இறுதி வரை மட்டும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.

Related posts