கிளிநொச்சியில் பாடசாலைக்குள் ஹெரோயின்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் ஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த போது மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை விடுமுறை நாளான நேற்று, அவர்கள் பாடசாலைக்குள்ளேயே ஹெரொயின் நுகர்ந்து கொண்டிருந்தபோது இவர்கள் சிக்கினர்.

பாடசாலை விடுமுறை தினமான நேற்று, பாடசாலைக்குள் சென்று ஹெரோயின் நுகர முற்பட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 80 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருகோணமலையிலிருந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹெரோயினை தமக்கு வழங்கியதாக கூறியுள்ளனர்.

Related posts