கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படலாம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் செப்டம்பர் மாத இறுதிக்குள் திறக்கலாமென அரசாங்கம் நம்புகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வருகை தர வசதி செய்யப்படும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக 2020 மார்ச் முதல் மூடப்பட்டுள்ளன.

எனினும், இலங்கையில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை அவர்களது நாடுகளிற்கு திருப்பி அனுப்பவும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அழைத்து வரவும் அரசாங்கம் சிறப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts