உலகின் மிக வயதான மனிதர் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்கரான ஃப்ரெடி ப்ளூமின் தனது 116 வயதில் இன்று இயற்கை எய்தினார் .
ஃப்ரெடி ப்ளூமின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர் மே 1904 ஆம் ஆண்டில் கிழக்கு கேப் மாகாணத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கின்றன. எனினும் இது கின்னஸ் உலக சாதனைகள் பதிவில் உறுதிப்படுத்தப்படவில்லை.
1918 ஆம் ஆண்டுகளில் இவரின் இளம்ருவத்தில்இவரது குடும்பம் முழுவதும் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயால் அழிக்கப்பட்டது. எனினும் இவர் தப்பியுள்ள இதேவேளை, இரண்டு உலகப் போர்களையும் நிறவெறிதாக்குதல்களில் இருந்தும் தப்பி தனது வாழ்வை தொடர்ந்துள்ளார்.
ப்ளோம், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு தொழிலாளியாகவும் முதலில் ஒரு பண்ணையிலும் பின்னர் கட்டிட நிர்மாண துறையிலும் கழித்தார் – 80 வயதில் ஒரு தொழிலாளியாக ஓய்வு பெற்றார்.