உக்ரேன் விமான விபத்து; அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் உக்ரைன் சர்வதேசச ஏர்லைன்ஸ் போயிங் 737-800 ஜெட் என்ற விமானம் விபத்துக்குள்ளானது தெரிந்ததே.

மேற்படி விமானத்தை முதல் ஏவுகணை தாக்கிய பின்னர் உக்ரேனிய போயிங்கின் பயணிகள் 19 விநாடிகள் உயிருடன் இருந்ததாக ஈரானின் சிவில் விமான போக்குவரத்து சபையை மேற்கோள் காட்டி நூர் செய்திச் சேவை ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை விபத்து விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்குமாறு விமான ஆணையத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் உக்ரைன் சர்வதேசச ஏர்லைன்ஸ் போயிங் 737-800 ஜெட் என்ற விமானம் விபத்துக்குள்ளானது.

இதில் சுமார் 176 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 3 ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் ஈரானிய ஜெனரல் காசெம் சோலைமணி கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்க தாக்குதல்களின் அச்சத்தின் மத்தியில் இந்த விமானத்தை ஈரானிய இராணுவ வீரர்களால் தவறுதலாக சுட்டு வீழ்த்தினர்.

ஜூலை மாதம், உக்ரேனிய பயணிகள் விமானம் கவிழ்ந்தது தொடர்பாக இழப்பீடு வழங்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், ஈரானின் மத்திய காப்பீட்டு அமைப்பின் தலைவர் தெஹ்ரானை விட ஐரோப்பிய காப்பீட்டு நிறுவனங்கள் விமானம் தொடர்பான செலவுகளை ஈடுகட்ட பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிட்டார்.

Related posts