இலங்கையர் 412 பேர் நாடு திரும்பினர்!

இலங்கையர் 412 பேர் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, துபாய், தோஹா கத்தார், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

412 பேரும் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்களின் கடமை நேர முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைகளின் பின்னர் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்த 161 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுடன் இதுவரை 31,173 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 52 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,304 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

Related posts