அரச வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்படாத பட்டதாரிகள் செப்டம்பர் 15ம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.pubad.gov.lk என்ற இணையதளத்தில் மேன் முறையீடு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில்பெறும் பட்டதாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் 2ம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.