மீண்டும் சிறைக்கு சென்ற பிள்ளையான்!

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இன்று மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

விளக்கமறியலிலுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன், பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அண்மையில் அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts