நித்தியானந்தா உருவாக்கிதாக கூறும் கைலாசா நாட்டின் கைலாஷியன் டொலர்களை வெளியிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தியான இன்று அவற்றை வெளியிட்டுள்ளார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என ஏராளம் சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா, தனித்தீவில் கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறியுள்ளார். அங்கு அவருடன் அழகிகளும் தங்கியுள்ளனர்.
இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து காணொளிக்களை பதிவேற்றி வருகின்றார்.
இந்நிலையில் கைலாசாவின் 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என நித்தியானந்தா அறிவித்திருந்தார்.
அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டொலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் பெயர் வைத்தார்.
இந்துக்களுடன் தொடர்புடைய 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் எனவும் கூறினார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று அறிவித்ததை போலவே கைலாஷியன் டொலர்களை வெளியிட்டார் நித்தியானந்தா.