கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம் ; பிரதம கொறடாவாக சித்தார்த்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனையும், பிரதம கொரடாவாக த.சித்தார்த்தனையும் நியமிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரன் மற்றும் சிறிதரன் கட்சியினருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் கலந்துகொள்ளவில்லை என்றும் கட்சியின் உள்வட்டாரங்களில் இருந்துவந்த தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்றிரவு நடைபெற்ற போதே இந்த மாற்றங்களைச் செய்வதற்கான இணக்கத்தை சம்பந்தன் தெரிவித்தார். இந்தியத் தூதுவருடனான சந்திப்பைத் தொடர்ந்து சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனையும், பிரதம கொறடாவாக த.சித்தார்த்தனையும் நியமிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்றிரவு நடைபெற்ற போதே இந்த மாற்றங்களைச் செய்வதற்கான இணக்கத்தை சம்பந்தன் தெரிவித்தார். இந்தியத் தூதுவருடனான சந்திப்பைத் தொடர்ந்து சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரோடு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) ஆகியோர் பங்கு பற்றினர்.

Related posts