வட்டுக்கோட்டையில் நகைகள் கொள்ளை!

வட்டுக்கோட்டை –  தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் வீட்டில் இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் கூரை ஓட்டினை கழட்டி உள்நுழைந்த திருடர்கள்நகைகளை திருடியுள்ளதாக  முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts