தனது சகோதரிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கிய வடகொரிய ஜனாதிபதி!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன், தனது சகோதரி கிம் யோ-ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார் என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் கூறுகிறது.

கிம் இன்னும் “முழுமையான அதிகாரத்தை” பராமரிக்கிறார், ஆனால் அவரது மன அழுத்த அளவைக் குறைக்க பல்வேறு கொள்கை துறைகளை ஏனையவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது

உளவுத்துறை அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான தேசத்தின் உறவுகளுக்கு தற்போது கிம் யோ-ஜாங் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கை குறித்த கூடுதல் அதிகாரம் பல மூத்த அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய கிம் யோ-ஜாங், அரசியலில் பொதுப் பங்கைக் கொண்ட தலைவரின் ஒரே நெருங்கிய உறவினர். அண்மையில் தென் கொரியா மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு புதிய, கடுமையான பிரசாரத்தையும் அவர் முன்னெடுத்தவர்.

டொனால்ட் டிரம்புடன் 2019 ஆம் ஆண்டில் வியட்நாமில் இடம்பெற்ற அணுசக்தி உச்சி மாநாட்டிற்கு கிம்யொங் உன்னுடன் இவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்தகது.

Related posts